கோலாகலமாக தொடங்கிய மன்னர் சார்லஸ் இன் முடிசூட்டு விழா! இளவரசர் ஹாரியும் பங்கேற்பு
இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் திக தி தன்னுடைய 96 வயதில் காலமானார்.
அவரின் மறைவுக்கு பின்னர் ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.
அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா
மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று சட்டபூர்வமாக அவர் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளார்.
முடிசூட்டு விழாவிற்காக பக்கிங்காம் அரண்மனையில் இருந்து சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் குதிரைகள் பூட்டப்பட்ட மிகச் சிறிய தங்க ரதத்தில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு சென்று அங்கு மத சங்குகளின் பின்னர் 3-ம் சார்லஸ் மன்னராக முடிசூட்டிக்கொள்ளவுள்ளார் .
அதேவேளை இளவரசர் ஹாரி தனது தந்தையின் முடிசூட்டு விழாவிற்கு வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாது கமிலாவின் மகன் டாம் பார்க்கர்-பவுல்ஸ் மற்றும் மகள் லாரா லோப்ஸ் மற்றும் அவர்களது தந்தை மற்றும் கமிலாவின் முன்னாள் கணவர் ஆண்ட்ரூ ஆகியோர் அபேவிற்குள் சென்றுள்ளனர்.