மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருத்தவர்களுடன் உரையாடிய மன்னர் சார்லஸ்
பிரித்தானிய மகாராணி எலிசபெத் (Queen Wlizabeth II) கடந்த 8-ம் திகதி மரணம் அடைந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டுள்ளனர்.
இரவு பொழுதிலும் நீண்ட வரிசையில் சுமார் 25 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருந்த மக்களுடன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் கைகுலுக்கி உரையாடினர்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியாகவும், நட்பாகவும் இருந்தார், மிகவும் மென்மையாக இருந்தார் என்று மன்னர் சார்லசுடன் உரையாடிய ஜெரால்டின் பாட்ஸ் தெரிவித்தார்.
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19-ம் திகதி நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
ராணி இறுதிச் சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனை ஜில் பைடன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.