ஜெர்மனியில் கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை
யேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள ஹெர்ன நகரில் காவல்துறையினர் ஒருவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலாளியைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்ட நபர் 51 வயதுடையவர் என்றும், இன்று காலை தனது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் காட்டி விரட்டியதாகவும் செய்திகள் வெளியாகின.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அவர் தனது வீட்டின் ஜன்னல் வழியாக காவல்துறையினரின் வாகனம் மீது பொருட்களை வீசினார்.
காவல்துறையினரின் வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. அந்த நபரை எதிர்கொள்ள வீட்டிற்குள் நுழைந்த பின்னர், அவர் கத்தியுடன் அவர்களை நோக்கி ஓடினார் என்றும், பின்னர் அதிகாரிகள் அவரைச் சுட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த நபருக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. டேர்ர்முண்டில் காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு கத்தி தாக்குதல்கள் நடந்துள்ளன கடந்த மாதம் பெர்லினில் ஒரு கத்திக்குத்து மற்றும் ஜனவரியில் பவேரியாவில் ஒரு தாக்குதலும் நடந்தது.