குரோஷியா முதியோர் இல்லத்தில் துப்பாக்கி சூடு ; தாய் உட்பட 6 பேரை கொலை செய்த மகன்
குரோஷியாவின் நகரம் ஒன்றில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அவரின் தாயார் உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஐந்து பேர் உடனடியாக மரணமானதாகவும் மற்றொருவர் மருத்துவமனையில் மரணமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது சம்பவத்தில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர், அதில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இறந்தவர்கள் பெரும்பாலும் 80 மற்றும் 90 வயதுக்குட்பட்டவர்கள் என்று குரோசியாவின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் அங்கிருந்து தப்பிச்சென்றபோதும் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேக நபர் 1973 இல் பிறந்தவர் என்றும் 1991-95 குரோசியாவில் நடந்த போரில் பங்கேற்ற படை உறுப்பினர் என்று குரேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சந்தேகநபரின் தாய், கடந்த 10 வருடங்களாக முதியோர் இல்லத்தில் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.