உங்கள் குழந்தைகள் இந்த விடயத்தில் எப்படி? ; பகீர் ஆய்வு முடிவு
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு போதியளவு உறக்கம் மிகவும் இன்றியமையாதது என அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
போதியளவு உறக்கம் கொள்ளாத சிறார்களின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றலில் தாக்கத்தை செலுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தி லான்செட் சயில்ட் என்ட் எடோல்சன்ட் ஹெல்த் என்னும் மருத்துவ சஞ்சிகையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
9 முதல் 10 வயது வரையிலான 8300 சிறுவர்களிடம் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
உரிய அளவில் உறங்காத சிறார்களின் மூளை வளர்ச்சியானது குறிப்பிடத்தக்களவு பின்னடைவை சந்தித்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் என்பன தொடர்பில் மூளையின் பகுதிகளில் நித்திரையின்மை நேரடித் தாக்கத்தை செலுத்துவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போதியளவு உறக்கமின்மை உளவியல் பிரச்சினைகள், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் வழியமைப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஐந்து முதல் 13 வயது வரையிலான சிறார்கள் 11 மணித்தியாலங்கள் இரவில் தூங்க வேண்டுமென கனேடிய சுகாதார திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.