கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கான தரை வழி பயணிகள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி
கடந்த மாதம் கனடாவிலிருந்து தரைவழியாக அமெரிக்க எல்லையை கடக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட பெரிதும் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்ட தரவுகளின்படி இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில், கனடா-அமெரிக்க நில எல்லை வழியாக 3,183,009 பயணிகள் அமெரிக்காவுக்குள் பிரவேசித்தனர்.
இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவான 4,093,973 பயணிகளுடன் ஒப்பிடும் போது சுமார் 900,000 எண்ணிக்கை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
பயண வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 26 சதவிகிதம் குறைந்துள்ளது.
இதேவேளை, வணிக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் லாரிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தை விட 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் மார்ச் மாத பயணிகள் எண்ணிக்கை, 2022-ம் ஆண்டு COVID-19 கட்டுப்பாடுகள் இருந்த காலம் முதல் இதுவரை பதிவான குறைந்தபட்சம் ஆகும்.
இந்த பயணிகளின் சரிவு, கனடா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை பிரதிபலிக்கிறது.