அமெரிக்காவில் திடீரென வானில் இருந்து கொட்டிய பெரும் தொகை உயிரினம்; ஆச்சர்யத்தின் விளிம்பில் மக்கள்
வானில் இருந்து மீன் கொட்டிய சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது . அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில், திடீரென பெய்த மழையில் வானில் இருந்து மீன்களும் கொட்டியுள்ளன.
இதைக்கண்டு வாயடைத்துப்போன அப்பகுதி மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட தொடங்கினர். அந்த நேரத்தில் நீர்த்தாரையோடு அதிகமாகக் காற்று அடிக்க ஆரம்பித்து இந்த சுழற்சியில் மீன்கள் பறக்க ஆரம்பிக்கும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சுழற்சியின் வேகம் குறைந்ததும் மீன்கள் கீழே விழத் தொடங்கும். இப்படி விழுவதே மழை பொழிவது போல் தோன்றும். உலகத்தில் இது போல் மீன் மழை பொழிவது இது முதல் முறை இல்லை.
டெக்சாஸ் மாகாணத்துக்கு முன்னாள் அமெரிக்காவிந் கலிஃபோர்னிய மாகாணத்தில் இதுபோன்ற மீன் மழை இதற்கு முன்னரும் பொழிந்துள்ளது. இதுமட்டுமின்றி, மெக்சிகோ, செர்பியா ஆகிய நாடுகளிலும் இதுபோல் மீன்கள் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.