இலங்கை வந்துள்ள மிகப் பெரிய சுற்றுலா கப்பல்
கோவிட் 19 தொற்று நோய் பரவலுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய மிகப் பெரிய கப்பலான வைக்கின் மாஸ் என்ற கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஐரோப்பாவில் பயணத்தை ஆரம்பித்துள்ள இந்த கப்பல் மத்திய கிழக்கு, இந்தியா ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள இந்த கப்பல நாளை மாலை 6.30 அளலில் மலேசியா நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளது.
மூன்று வருடத்திற்கு மேலான காலத்திற்கு பின்னர் வந்துள்ள இந்த கப்பலில் 650 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதுடன் கப்பலில் 450 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கப்பலில் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் தற்பேது கொழும்பு, காலி, பின்னவல ஆகிய பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.