மறைந்த பிரிட்டன் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கானோருக்கு வாய்ப்பு
ஸ்காட்லந்தின் தலைநகர் எடின்பர்கில் (Edinburgh) உள்ள St Giles' தேவாலயத்தில் மறைந்த பிரிட்டன் ராணியாரின் எலிசபெத்தின் (Queen Elizabeth II )நல்லுடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராணியாருக்கு (Queen Elizabeth II ) ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்த வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்னர் சார்ல்ஸ் அங்கு பிரார்த்தனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
எலிசபெத் அரசியாரின் (Queen Elizabeth II ) நல்லுடலைத் தாங்கிய பேழை பால்மோரல் (Balmoral) அரண்மனையிலிருந்து 6 மணி நேரம் பயணம் மேற்கொண்டது. இதன்போது சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அங்சலி செலுத்தினார்கள்.
இதனையடுத்து நாளை (13 செப்டம்பர்) எலிசபெத் அரசியாரின் (Queen Elizabeth II ) நல்லுடலைத் தாங்கிய பேழை லண்டனுக்கு விமானம் வழி அனுப்பப்படும்.
பொதுமக்கள் அஞ்சலி
பிரிட்டன் நாடாளுமன்றம் கூடும் Palace of Westminster கட்டடத்தில் அவரது நல்லுடல் வைக்கப்பட்டு பொதுமக்கள் நாளை மறுநாள் (14 செப்டம்பர்) முதல் வரும் திங்கட்கிழமை (19 செப்டம்பர்) வரை நேரடியாகச் சென்று மரியாதை செலுத்தமுடியும்.
அதன்பின்னர் அரசாங்க மரியாதையுடன் இறுதிச் சடங்கு 19 ஆம் திகதி நடைபெறும்.
உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கும் அந்த நிகழ்வை உலகெங்கும் மில்லியன் கணக்கானோர் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (8 செப்டம்பர்) பிரிட்டன் மகாராணி எலிசபெத் (Queen Elizabeth II ) , அவரின் 96ஆவது வயதில் காலமானார்.