கனடாவில் காணாமல் போன சிறுமி
கனடாவில் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
லாவல் பகுதியில் இந்த சிறுமி காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எலசியா பெர்ன் என்ற 15 வயதான சிறுமியே இவ்வாறு காணாமல் போய் உள்ளார்.
இந்த சிறுமியின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களது பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த சிறுமி மோசமான நண்பர்களுடன் பழகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுமி மொன்றியல் அல்லது நாவல் பகுதியில் இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறு இந்த சிறுமி 5 அடி 9 அங்குலம் உயரத்தை கொண்டவர் எனவும் 150 பவுண்டு எடை உடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறுமி பிரெஞ்சு மொழியை சரளமாக பேசக் கூடியவர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.