கனடாவில் குழந்தைகளுக்கான இந்த ஆபரணங்கள் குறித்து எச்சரிக்கை
அமேசான் வழியாக கனடாவில் விற்பனையான குழந்தைகள் ஆபரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபரணங்களில் அதிக அளவிலான இரும்புச்சத்து (lead) கண்டுபிடிக்கப்பட்டதால், கனடிய சகாதார முகவர் நிறுவனம் Health Canada ஆயிரக்கணக்கான பொருட்கள் மீதான மீள அழைப்பை (recall) அறிவித்துள்ளது.
Dckazz Stitch and Scrump Best Friends Necklace எனும் ஆபரணங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது நீல மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள இரு லோக பதக்கங்களுடன் பிளாஸ்டிக் பையில் இணைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.
“இந்த நகை வகையில் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிக அளவிலான இரசாயனங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக கனடிய சுகாதார முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கைவினைப் பொழுதுபோக்கு தொகுப்பு, இதில் பலவகை முத்துக்கள், பதக்கங்கள், hair clips, keychains, தூக்கு நகைகள் ஆகியவை அடங்கியுள்ளன.
குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய வகையிலான சில உலோக இரசானயப் பதார்த்தங்கள் ஆபரணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.