உடனடியாக வெளியேறுங்கள்; இஸ்ரேல் ராணுவத்தின் அறிவிப்பில் காத்திருக்கும் ஆபத்து
லெபனானின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அந்நாட்டின் தெற்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் வலுவான தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
முன்னதாக, ஹிஸ்புல்லா படைகளுடன் கடந்த 2023 - 24 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது லெபனானில் வசித்த மக்கள் வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.