கனடாவில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட தடை
கனடாவில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மீண்டும் ஒரு அவமதிப்பை எதிர்கொண்டுள்ளார்.
கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தடை விதித்துள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Nepean தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்யாவுக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2015ஆம் ஆண்டு முதல் தான் தனது தொகுதி மக்களுக்காக முழுமூச்சுடன் உழைத்துவருவதாக தெரிவித்துள்ள ஆர்யா, இந்த செய்தி தனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே லிபரல் கட்சித் தலைமைக்காக போட்டியிட முயன்றபோதும் ஆர்யாவுக்கு லிபரல் கட்சி அனுமதி மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்துவருபவரான ஆர்யாவுக்கு, அதன் காரணமாக கனடாவில் எதிர்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.