குடியிருப்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்: வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்
மராட்டிய மாநிலத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் லிவ் இன் உறவில் வசித்துவந்த பெண் ஒருவரே இவ்வாறு துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் மிரா-பஹ்யந்தர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32 வயதான சரஸ்வதி வித்யா காதலனான 56 வயது மனோஜ் ஷைனி என்பவருடன் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.
சரஸ்வதியும், மனோஜும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசவே பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சரஸ்வதியின் சிதைந்த உடலை மீட்டுள்ளனர்.
இதற்கமைய சரஸ்வதி படுகொலை செய்யப்பட்டு அவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது வெளிசத்துக்கு வந்துள்ளது.
சரஸ்வதியை படுகொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டியது யார் என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் முதற்கட்டமாக இருவரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கைதான நபர்களின் அடையாளத்தை வெளியிட மறுத்துள்ளனர்.
சரஸ்வதியை கொலை செய்தது, கொலைக்கான காரணம் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.