பிரிட்டனில் மீண்டும் லாக் டவுனா?
பிரித்தானியாவில் 70% சத விகிதமான வைத்தியசாலைகளில் ஒமிக்ரான் நோயாளிகள் செல்லும் பட்சத்தில், லாக் டவுன் ஒன்றை அறிவிக்க பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது 55% சத விகிதமான வைத்தியசாலைகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பிரதமர் வரும் திங்கட் கிழமை புது கட்டுப்பாடுகளை அறிவிக்க உள்ள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த நடை முறை பலன் தரவில்லை என்றால் மட்டுமே 2 வார லாக் டவுன் நோக்கி நகர பொறிஸ் (Boris Johnson) திட்டமிட்டுள்ளாராம். பிரித்தானியாவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் என்ற விகிதத்தில் ஒமிக்ரான் பரவி வருகிறது.
இந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதியாகும் நபர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. காரணம் ஒமிக்ரான் முன்னர் விஞ்ஞானிகள் அஞ்சியது போல ஆபத்தான வைரஸ் அல்ல என கூறியுள்ளனர்.
இருப்பினும் இதே நிலை நீடித்தால், பிரித்தானியாவில் பலர் வைத்தியசாலையில் அனுமதியாக வேண்டி வரும் என்றும் பரவும் விகிதத்தை நாம் உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்றும், மருத்துவர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.
இதன் காரணமாக, சில முக்கியமான கட்டுப்பாடுகளை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) அறிவிக்க உள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.