லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு; 10 000 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதுடன், காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசம்
காட்டுத்தீயால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.