குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டாம்... 29 மில்லியன் டொலர் லொட்டரியில் வென்றவர் சொன்ன காரணம்
சீனாவில் 29 மில்லியன் டொலர் லொட்டரியில் பரிசாக வென்ற நபர், தமது குடும்பத்தாரிடம் இது தொடர்பில் தெரிவிக்கப் போவதில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேவையற்ற விளம்பரம் வேண்டாம் எனவும், பொதுமக்கள் தமது குடும்பத்தாரிடம் சாதாரணமாக பழகும் வாய்ப்பும் இதனால் இழக்க நேரிடும் என கருதுவதாக அவர் காரணம் கூறியுள்ளார்.
லி என மட்டும் அடையாளப்படுத்தியுள்ள அந்த நபர் ஒரு பொம்மை உடையில் சென்று 29 மில்லியன் டொலர் தொகைக்கான காசோலையை பெற்றுள்ளார். லொட்டரியில் மிகப்பெரிய தொகை வென்றுள்ளது தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ள லி,
ஆனால் எனது குடும்பத்தினர் இதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை எனவும், அவர்கள் எதிர்காலத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாகவும் மனநிறைவற்றவர்களாகவும் இருப்பார்கள் என காரணம் கூறியுள்ளார்.
லொட்டரியில் பரிசு வென்றதாக அக்டோபர் 21ம் திகதி அறிந்துகொண்டதும், நகரில் ஹொட்டல் அறை ஒன்றை பதிவு செய்த லி, 24ம் திகதி உரிய அலுவலகம் சென்று முறைப்படி காசோலையை கைப்பற்றியுள்ளார்.
தமக்கு கிடைத்துள்ள தொகையில் அதிகமாக செலவிடப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள லி, திட்டமிட்டு தேவைக்கு ஏற்றார்போல் செலவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தமது லொட்டரி தொகையில் 677,697 டொலர் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.