பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; உலகின் மிகபெரிய விமானத்தின் முன்சக்கரம் உடைந்து பலர் காயம்
ஜேர்மன் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.
வியாழக்கிழமையன்று(4) ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் ஒரு நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்தபோது, லுஃப்தான்சா நிறுவனத்தால் இயக்கப்படும் போயிங் 787 ரக விமானம் ஒன்றின் முன்சக்கர அமைப்பு உடைந்தது.

விமானப் பணியாளர்களும் தரை ஊழியர்களும் மட்டுமே விமானத்தில் இருந்தனர்
இந்தச் சம்பவத்தில் பல ஊழியர்கள் காயமடைந்ததாக லுஃப்தான்சா நிறுவனம் தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் அந்த விமானத்தில் பயணிகள் இன்னும் ஏறவில்லை.
பல ஊழியர்கள் காயமடைந்து, தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர் என லுஃப்தான்சா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து லுஃப்தான்சா விமானப் பணியாளர்களும் தரை ஊழியர்களும் மட்டுமே விமானத்தில் இருந்தனர்.
இந்த விமானம் லுப்தான்சா நிறுவனத்தின் புதிய போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களில் ஒன்றாகும். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஜேர்மன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் லுஃப்தான்சா நிறுவனம் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
சம்பவத்தையடுத்து லொஸ் ஏஞ்சலஸுக்குச் செல்லவிருந்த LH450 விமான சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.