டொனால்ட் ட்ரம்பிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரொன் வெளியிட்ட தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட உக்ரைன் அமைதி திட்டம் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரொன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, ட்ரம்பின் திட்டம் அமைதியை நோக்கி எடுக்கப்படும் சரியான முயற்சி.

மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள்
இருப்பினும், இந்த திட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய, மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அமைதி திட்டம், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதாக மாற்றப்பட வேண்டும்.
மேலும், இந்த திட்டம் ரஷ்யர்களுக்கு எது ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது பற்றிய ஒரு யோசனையை தருகிறது. ரஷ்யாவுடன் அமைதி ஏற்பட்டால் உக்ரைனின் முதல் செயல், அதன் இராணுவத்தை மீண்டும் உருவாக்குவதாக இருக்கும்.
முடக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சொத்துகள் ஐரோப்பாவில் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்பதை ஐரோப்பா மட்டுமே தீர்மானிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.