மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள்
ஜி-20 உச்சி மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (10.09.2023) காலை உலகத் தலைவர்கள் டெல்லி - ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ஜி-20 அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றிருக்கிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநாடுகள் நடைபெற்றன.
இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று (10.09.2023) காலை டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் வருகை தந்தனர். வருகைதந்த தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ், சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, வங்கதேச பிரதமர் ஷேர் ஹசினா, சிங்கப்பூர் பிர்டஹமர் லீ ஸிங் லூங் ஆகியோர் முதலில் ராஜ்காட் வந்தடைந்தனர்.
காந்தி நினைவிடத்துக்கு வந்த ஒவ்வொரு தலைவரையும் அங்கவஸ்திரம் அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார்.