கொரோனாவால் சீனாவில் ஸ்தம்பிக்கும் முக்கிய நகரம்! வெளியான பகீர் தகவல்
சீன நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில் 70 சதவீத ஷாங்காய் நகர மக்கள் வரும் 2 மாத காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது.
சீனாவில் கடந்த மாதம் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் திடீரென தளர்த்தப்பட்டன. இதனால் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் தொடர்பில் முதன்மை மருத்துவர் ஒருவர் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாங்காய் நகரில் 2.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு கொரோனா வேகமாக பரவுவதால் இதில் சுமார் 1.75 கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை வரலாம். எதிர்வரும் பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும்.
ஷாங்காய் மருத்துவமனையில் மட்டும் நாளாந்தம் புதிதாக 1,600 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
தினமும் கொரோனா நோயாளிகளை ஏற்றிக் கொண்டு நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு வருகின்றன.
. 65 வயதுக்கு மேற்பட்டோர் அதிக அளவில் ஒமிக்ரோன் வகையால் பாதிக்கப்படுகின்றனர் என அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.