ட்ரம்பால் வந்த வினை ; அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சந்தித்த பெரும் சரிவு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இதில் அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
ட்ரம்ப் அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை சரிவை சந்தித்துள்ளது.

சர்வதேசக் கல்வி நிறுவனத்தின் (Institute of International Education) அறிக்கைப்படி, 2025-26ம் கல்வி ஆண்டில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 17% சரிந்துள்ளது.
2023-24 உடன் ஒப்பிடுகையில் இளங்கலையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11.3% அதிகரித்துள்ளது.
இதே சமயம் முதுகலை பிரிவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 9.5% சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவுக்கு புதிய விசா நடைமுறை இதற்கு ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.