அமெரிக்காவில் மீண்டும் திறக்கப்படும் முக்கிய சிறைச்சாலை ; ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான சிறைச்சாலைகளில் ஒன்றான அல்காட்ராஸ் சிறைச்சாலையை (Alcatraz) மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
கொடூரமான குற்றவாளிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்படும் இந்த சிறைச்சாலை, கலிபோர்னியா கடற்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது.
1963 ஆம் ஆண்டில் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டடங்களின் பழுதுகள் காரணமாக மூடப்பட்ட இந்த சிறைச்சாலை, தற்போது சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது.
அமெரிக்காவில் வன்முறை அதிகரித்து வருவதால், குற்றவாளிகளைத் தனிமைப்படுத்துவதற்காக அல்காட்ராஸை கட்டமைத்து, விரிவுபடுத்தி மீண்டும் திறக்க அமெரிக்க ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.