கனடாவில் 63 வயது முதியவரின் மோசமான செயல்
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் விட்பி நகரில், ஒரு பொது கழிவறையில் மூன்று பதின்ம வயதுடையவர்களிடம் சந்தேகத்திற்கிடமான தொடர்பு வைத்ததாகக் கூறப்படும் 63 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டர்ஹாம் Durham பிராந்திய காவல்துறை இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
புதன்கிழமை காலை, கிவயன்ஸ் ஹைடன்ஸோர் Kiwanis Heydenshore பூங்கா அருகே உள்ள வோட்டர் Water மற்றும் சவுத் பிளயர் South Blair தெருக்களில், ஒருவர் மூன்று இளையோர்களிடம் நெருக்கமாக வந்து, தனது வாகனத்திற்கு வருமாறு அழைத்துள்ளார் என கூறப்படுகிறது.
அந்த இளைஞர்கள் இது பற்றி தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததும், அவர்கள் உடனே காவல்துறையை தொடர்பு கொண்டனர்.
குற்றஞ் செய்ததாக சந்தேகிக்கப்படம் நபர் காவல்துறையினர் வருவதற்குள் தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், சில நேரங்களில் காவல்துறையினர் அவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். வயதான பெர்னார்ட் டியரி (Bernard Deery) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தவறாக இழுத்துச் செல்ல முயற்சி செய்ததாகக் கூறப்படும் இவர் மீது,
14 வயதுக்குட்பட்டவர்களை கடத்த முயற்சி செய்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.