கனேடிய மாகாணத்தை உலுக்கிய கொடூர சம்பவத்தில் வெளியாகவிருக்கும் தீர்ப்பு
கிழக்கு ரொறன்ரோவில் பெண் ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
தம்மீதான குற்றச்சாட்டை இதுவரை ஒப்புக்கொள்ள மறுக்கும் அந்த நபர், கொலை செய்யும் அளவுக்கு தமக்கு மனத்திடம் இல்லை என வாதிட்டு வருகிறார்.
கடந்த 2018ல் அஜாக்ஸ் பகுதியில் மார்ச் மாதம் 14ம் திகதி நடுங்க வைக்கும் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குடியிருப்பு ஒன்றில், தாயார் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதில் 39 வயதான Krassimira Pejcinovski என்பவரும் அவரது மகள் 13 வயது Venellia ஆகியோர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவரது மகன் 15 வயதான ராய், கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
இந்த வழக்கின் விசாரணையில் Krassimira Pejcinovski என்பவர் உறவை முறித்துக்கொண்ட ஆத்திரத்தில், தற்போது தண்டனைத் தீர்ப்புக்காக காத்திருக்கும் Cory Fenn என்பவர் பழி தீர்த்ததாகவே தெரிய வந்துள்ளது.
அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதுடன், நீதிமன்றம் அனுமதித்த சட்டத்தரணியையும் அவர் நிராகரித்துள்ளார்.
தமது தரப்பு வாதத்தை தாமே நீதிமன்றத்தில் அவர் முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்ததை அடுத்து, Cory Fenn மீதான தண்டனைத் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.