கனடாவில் தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது
கனடாவின் கல்கரி பகுதியில் தாயை கொன்றதாக அவரது மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கல்கரியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார் 56 வயதான Alice (Jingying) Ai என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்த நபர் குறித்த பெண்ணின் மகன் என பின்னர் விசாரணைகளின் மூலம் தெரிய வந்தது.
20 வயதான குறித்த இளைஞர் Alex (Axin) Xu எனவும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை வழங்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலையாக உள்ளார்.
கல்கரியில் இந்த ஆண்டு இதுவரை 10 படுகொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.