மகளையும், தந்தையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய இளைஞன்
அவிசாவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் ஒருவரை காயப்படுத்தியதுடன், அவரது தந்தையையும் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அவிசாவளை - பதுவத்த பிரதேசத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.
அத்தோடு கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த தந்தை
சம்பவத்தில் அவிசாவளை, பதுவத்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்கான யுவதியும் அவரது தந்தையும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.