கனடாவில் 7 வயது சிறுமி மாயமானதில் அதிர்ச்சி திருப்பம்: வெளியான பின்னணி
கனடாவில் சொந்த மகளை கடத்தியதாக கூறி Saskatchewan பிராந்திய நபர் மீது பொலிசார் வழக்கு பதிந்துள்ளதுடன், நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கையையும் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிசார், தாயாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்த 7 வயது சிறுமியை அவரது தந்தை 52 வயதான Michael Gordon Jackson என்பவர் கடத்தி சென்றுள்ளார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அவர் மீது கடத்தல் தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், 7 வயது சிறுமி சாரா ஜாக்சன் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் பொலிசார் கோரியுள்ளனர்.
பொலிசாரிடம் இருந்து தப்புவிக்க அந்த நபருக்கு சிலர் உதவுவதாக சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு உதவும் நபர்கள் மீதும் வழக்கு பதியப்படும் வாய்ப்புகள் இருப்பதாக பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.