க்யூபகெ்கில் இடம்பெற்ற பணியிட விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் க்யூபெக்கில் இடம்பெற்ற பணியிட விபத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார்.
க்யூபெக் சிட்டியில் ஒரு பணியாயளர், உயரமான இடத்திலிருந்து விழுந்து ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபர்கர் Duberger பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கீழே விழுந்து, மயக்கநிலையில் தரையில் கிடந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
58 வயதான குறித்த பணியாளர் கடுமையான காயங்களால் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் ஓர் தற்செயலான விபத்து என பொலிஸார் ஊகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணகைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.