தீ விபத்தில் சிக்கிய நபரையும் நாயையும் மீட்ட அதிகாரிகள்
கனடாவின் ஹமில்டன் பகுதியில் தீ விபத்தில் சிக்கிக் கொண்ட நாய் ஒன்றையும், நபர் ஒருவரையும் தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்ட நிலையில் இந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
ரோஸ்டேல் பகுதியில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீ பரவியிருந்தது என தீயணைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.
வீட்டுக்குள் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சத்தம் குட்டு அந்த நபரை தீயணைப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குறித்த நபர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் காயமடைந்த நிலையில் இருந்த நாய் ஒன்றையும் படையினர் மீட்டுள்ளனர்.
எனினும், இந்த வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சுமார் 500,000 டொலர்கள் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.