பிரம்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி
கனடாவின் பிரம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பீல் பிராந்திய பொலிஸார் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் லோபர்ஸ் லேக் லேன் மற்றும் கொனெஸ்டோகா ட்ரைவ் பகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அவசர அழைப்பினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில் ஆண் ஒருவரை மீட்டுள்ளனர். பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.

சந்தேக நபர் அல்லது நபர்கள் சம்பவத்துக்குப் பிறகு இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் இளம் வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு அப்பால் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல் அல்லது வீடியோ காட்சிகள் உள்ளவர்கள் 905-453-2121, ext. 3205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.உ