மெக்சிகோவில் வெடித்த Gen Z போராட்டம் ; ஜனாதிபதியின் தேசிய அரண்மனை பகுதியில் மோதல்
மெக்சிகோவில் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெனரல் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பங்கேற்றுள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தேசிய அரண்மனை பகுதியில் மோதல்
இருப்பினும், பல்வேறு வயதுடையவர்கள் போராட்டங்களில் பங்கேற்று, ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் வசிக்கும் மெக்சிகோ நகரில் உள்ள தேசிய அரண்மனையைச் சுற்றியுள்ள வேலிகளை உடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த நாட்டில் உள்ள காவல்துறை கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கலகத் தடுப்பு உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளது, மேலும் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 40 பேர் உட்பட 100 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 20 பொதுமக்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.