பிரான்ஸில் மர்ம நபர்களால் 6 தடவைகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்!
பிரான்ஸில் ஆறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு 9.30 மணி அளவில் La Valette-du-Var (Var) எனும் சிறு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
29 வயதுடைய நபர் ஒருவர் தனது மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது ஒரு சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து ஆறு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். தலையில், மார்பில் சுடப்பட்டதாக பொலிஸார் விசாரணையில் தெரிவித்தனர்.
மேலும் கொல்லப்பட்ட நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கின்றில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.