டொரொண்டோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
டொரொன்டோவின் பொழுதுபோக்கு மாவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆண் உயிருக்கு ஆபத்தான நிலையில் காயமடைந்துள்ளார்.
டொரோன்டோ காவல்துறையினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 10:30 மணியளவில் ஜான் ஸ்ட்ரீட் மற்றும் அடிலெய்டு ஸ்ட்ரீட் வெஸ்ட் பகுதியில் “துப்பாக்கிச் சத்தம்” கேட்டதாக பதிவு செய்யப்பட்டு, அதற்கு பதிலளிக்கும் விதமாக அங்கு சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
மூடப்பட்ட பாதைகள்
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒரு ஆண் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டதாகவும் அவரை உடனடியாக மருத்துவ உதவியாளர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் வடக்கு நோக்கி செல்லும் ஜான் ஸ்ட்ரீட், அடிலெய்டு ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ரிச்மண்ட் ஸ்ட்ரீட் வெஸ்ட் இடையே மூடப்பட்டதுடன், அடிலெய்டு ஸ்ட்ரீட் வெஸ்ட், ஜான் ஸ்ட்ரீட் மற்றும் விட்மர் ஸ்ட்ரீட் இடையேயும் மூடப்பட்டது.
வாகன சாரதிகள் இந்தப் பகுதியைத் தவிர்த்து “மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு” அறிவுறுத்தப்பட்டனர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 416-808-2222 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.