தாயையும் பாட்டியையும் கொலை செய்து தலைமறைவான நபர் கைது
கனடாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தாயையும் பாட்டியையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்பட்ட ஒரு நபர், நீண்ட கால தேடலுக்குப் பிறகு எட்டோபிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரட்டைக் கொலை 2024 ஆகஸ்ட் 23ஆம் திகதி அல்டர்வுட் Alderwood பகுதியில், ஷெல்டொன் Sheldon மற்றும் சில்வர்கிரெஸ்ட் Silvercrest அவென்யூ அருகே உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, 60 மற்றும் 82 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
பின்னர், கொல்லப்பட்டவர்கள் 60 வயதான ஷாரோன் ப்ரேசர் Sharon Fraser மற்றும் 82 வயதான கொலின் ப்ரேசர் Colleen Fraser என அடையாளம் காணப்பட்டனர்.
இருவரும் டொரொண்டோவைச் சேர்ந்தவர்கள். இவர்களது மரணங்கள் 2024 ஆம் ஆண்டில் நகரில் இடம்பெற்ற 53வது மற்றும் 54வது கொலைகளாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொலைக்காரணம் மற்றும் மரண காரணிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த கொலைக்குப் பின்னர், ஜோசப் அய்லா Joseph Ayala (அப்போது 33 வயது) என்பவருக்கெதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியும் கேட்கப்பட்டது.
அய்லா தனது தாயாரும் பாட்டியும் இருந்த வீட்டில் தங்கியிருந்தவர் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து மொத்தம் ஒரு ஆண்டுக்குமேல் கடந்த பிறகும், அவர் கைது செய்யப்படாத நிலையில் இருந்தார்.
ஆனால், கடந்த திங்கட்கிழமை மதிய நேரத்தில் எடொபிகொக்கில் Etobicoke-வில், 22வது பிரிவுக்குட்பட்ட பகுதியில் அவர் Toronto போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.