முதல்வர் டக் ஃபோர்டு வீட்டின் முன்பு கறி வெட்டும் கத்தியுடன் மிரட்டல் விடுத்த நபர்
ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு வீட்டின் முன்பு கறி வெட்டும் கத்தியுடன் மிரட்டல் விடுத்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த தகவலை முதல்வர் அலுவலகம் அறிக்கையின்மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் பிராந்திய செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில்,
திங்கட்கிழமை இரவு முதல்வர் டக் ஃபோர்டின் குடியிருப்பு அருகே கறி வெட்டும் கத்தியுடன் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசாரின் துரித நடவடிக்கையை பாராட்டியுள்ள டக் ஃபோர்டு, இதனால் அபாயம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், கைதான நபர் தொடர்பில் பொலிசார் எந்த தகவலையும் வெளியிட மறுத்துள்ளனர்.