சஸ்கட்ச்வானில் இடம்பெற்ற படுகொலை: சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வரும் பொலிஸார்
சஸ்கட்ச்வானில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சஸ்கட்ச்வான் மாகாணத்தின் பழங்குடியின மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்துச் சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், 15 காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் 31 வயதான டேமியன் சன்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சன்டர்சன் ஆகியோர் தொடர்புபட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனேடிய தேசியப் பொலிஸ் பிரிவு மற்றும் ரெஜினா பொலிஸாரும் குறித்த சந்தேக நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருவரையும் பாதுகாப்பான முறையில் கைது செய்யும் வரையில் தேடுதல் வேட்டை கைவிடப்படாது என ரெஜினா பொலிஸ் ஆணையாளர் எவென் ப்ரேய் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் வெல்டொன் ஆகிய பகுதிகளில் சுமார் 13 இடங்களில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.