கனேடிய எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
கனேடிய எல்லைப் பகுதியில் வெள்ளையினத்தவர் அல்லாத கனேடியர்கள் ஒடுக்குமுறைகளை சந்திக்க நேரிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இன ரீதியான ஒடுக்குமுறை என தாம் இதனை கருதுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது இனத்தை அடிப்படையாகக் கொண்டு ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக தாம் உணர்வதாக வின்னிபிக்கைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஒர் கனேடிய பிரஜை எனவும் கனடாவில் பிறந்து வளர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரை வழியாக கனேடிய எல்லையை கடக்கும் போது ஒவ்வொரு முறையும் தாம் இன ரீதியான ஒடுக்குமுறைகளை எதிர்நோக்க நேரிடுவதாகவும் தமது நண்பர்களுக்கு இவ்வாறான எந்தவொரு பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகளில் சிலர் இன ரீதியான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றனர் என சக அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்.
வெள்ளையின நண்பர்கள் இவ்வாறான நெருக்கடிள் எதனையும் எதிர்நோக்கியதில்லை என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.