விடுமுறை செலவுகளை கட்டுப்படுத்தும் கனடியர்கள்
கனடியர்கள் விடுமுறை கால செலவுகளை வெகுவாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த ஆண்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, கிறிஸ்துமஸ் விடுமுறை காலச் செலவுகளை பெரிதும் குறைக்கும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஹரிஸ் என்ட் பார்ட்னர்ஸ் Harris & Partners என்ற நிதி ஆலோசனை நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, பெரும்பாலான கனேடியர்கள் இந்த ஆண்டு எளிமையான கிறிஸ்துமஸ் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.

1,820 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 72 சதவீதம் பேர் இந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் செலவுகளை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், 62 சதவீதம் பேர் தாங்கள் பொருளாதார ரீதியாக விடுமுறை காலத்திற்குத் தயாராக இல்லை என்றும், 53 சதவீதம் பேர் கிறிஸ்துமஸ் செலவுகளைச் சமாளிக்க முடியுமா என்ற கவலையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இது கனேடியர்கள் தற்போது எதிர்கொள்ளும் நிதிச் சிக்கலின் தெளிவான அறிகுறி. அவர்கள் செலவுகளைத் தவிர்க்க விரும்பவில்லை; ஆனால், உயர்ந்த வாழ்க்கைச் செலவில் அவர்களின் வரவு செலவு திட்டத்தில் கூடுதல் இடம் இல்லாததால் செலவுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என இந்த ஆய்வை நடத்திய நிறுவனத்தின் தலைவர் ஜோஷுவா ஹாரிஸ் கூறியுள்ளார்.
அதனால், இந்த ஆண்டு கனேடியர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சுமாரான அளவில் நடத்துவார்கள் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.