பதற்றம் தணிக்க முயன்றபோது திடீர் மோதல் ; தென் சிரியாவில் 30 பேர் பலி
தென் சிரியாவில் ஏற்பட்ட பதற்றத்தைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில், அனுப்பப்பட்ட படைத்தரப்பினருக்கும், பழங்குடியினருக்கும் இடையிலான மோதலில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், யுத்த கண்காணிப்பாளராகச் செயல்படும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம், மரணமானவர்களின் எண்ணிக்கை 37 எனக் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர, ஸ்வீடா நகரில் பெடோயினி சுனி ஆதிவாசிகளுக்கும், ட்ரூஸ் மத சிறுபான்மை போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம், சுனி முஸ்லிம் ஆயுததாரிகள் தலைநகர் டமஸ்கஸ்ஸை தாக்கி, ஜனாதிபதி பஷிர் அல்-அசாத்தின் நிர்வாகத்தை வீழ்த்தினர்.
இதன்படி, 54 வருடங்களுக்குப் பின்னர் அவரினாலும், அவரது குடும்பத்தவர்களாலும், கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த சிரியாவின் ஆட்சி வீழ்ச்சி கண்டது.
எனினும், சிரியாவில் இன்று வரை பாரிய மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.