கனடாவில் தமிழ் பெண் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது
கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற கொலைவழக்குடன் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2018 முதல் ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்ட சோலஸ் ரோடில் உள்ள வீட்டில் மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்திருந்ததாக தெரிவித்தனர். இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும், இந்த தாக்குதலில் 20 வயது நிலாக்ஷி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார். மற்றொரு 26 வயது ஆணுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஒரு நாய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது. 28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குறித்த நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி (Attempted Murder) ஆகிய கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.