தன்னை இந்திய கிரிக்கெட் வீரராக மாற்றிக் கொண்ட chatgpt owner!
AI தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியது Open AI-ன் ChatGPT. சமீபத்தில் சாட்ஜிபிடி மூலமாக கிப்ளி ஸ்டைல் ஆர்ட் செய்வது வைரலாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஏராளமான மக்கள், ஜப்பானிய அனிமே பாணியான கிப்ளி ஸ்டைலில் தங்கள் புகைப்படங்களை மாற்றி வரும் நிலையில், இதுகுறித்து படைப்பாளிகளிடையே எதிர்ப்பு குரலும் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சாட்ஜிபிடி நிறுவனரான சாம் ஆல்ட்மேன் தன்னை கிப்ளி ஸ்டைல் ஆர்ட்டில் ( Ghibli art style) மாற்றி ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இந்திய கிரிக்கெட் வீரர் உடையணிந்து மைதானத்தில் நிற்கிறார்.
இதை அவர் ஷேர் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் மீது அவருக்கு உள்ள அபிமானத்தை காட்டுவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த இமேஜ் வைரலாகி வருகின்றது.