செவ்வாயில் பெர்சவரன்ஸ் ரோவரின் புதிய கண்டுபிடிப்பு! விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

Mars scientists sound Planet Perseverance Rover spoken
By Shankar Mar 24, 2022 06:54 PM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் நாம் பேச கூடிய ஒலியின் வேகம் பற்றிய தகவலை பெர்சவரன்ஸ் ரோவர் விஞ்ஞானிகளுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 30ஆம் திகதி விண்கலம் ஒன்றை அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

நாசா அனுப்பிய இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த நிலையில், விண்கலத்தில் இருந்து பெர்சவரன்ஸ் ரோவர், கடந்த வருடம் இதே நாளன்று ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.

இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் பல தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் சேகரித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

இதில், சிவப்பு கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் பற்றிய விவரங்களை விஞ்ஞானிகளுக்கு இந்த பெர்சவரன்ஸ் ரோவர் தெரிவித்துள்ளது.

செவ்வாயில் ஒலியின் வேகம் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் கொண்ட குழுவானது ஆய்வில் ஈடுபட்டது. அதில், செவ்வாய் பற்றி பயனுள்ள தகவல் எதுவும் கிடைக்க வாய்ப்பு உண்டா? என அவர்கள் அறிய முற்பட்டனர்.

இந்த ரோவரில் இருந்து ஒலி அலைகள் வெளியேறி சென்று, பின்பு ரோவரின் மைக்ரோபோனுக்கு திரும்பி வரும் கால அளவு ஆய்வாளர்களால் கணக்கிடப்பட்டது. 

இந்த ஆய்வில், செவ்வாயில் ஒலியானது ஒரு வினாடிக்கு 240 மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்வது தெரிய வந்தது.

ஆனால், நாம் வாழ கூடிய பூமியில், காற்றின் வழியே பயணம் செய்யும் ஒலியானது ஒரு வினாடிக்கு 343 மீட்டர் அல்லது 2.9 வினாடிகளுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை செல்கிறது. இதனால், செவ்வாயில் ஒலியின் வேகம் குறைவது தெரிய வந்துள்ளது.

இதேபோன்று, வெவ்வேறு அதிர்வெண்களை கொண்ட ஒலியானது வெவ்வேறு வேகங்களில் பயணிக்கிறது. 400 ஹெர்ட்சுக்கு மேல் செல்லும்போது, ஒலியின் வேகம் 10 மீட்டர் அதிகரிக்கிறது ஆகியவையும் தெரிய வந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 2 பேர் செவ்வாயில் பேசி கொள்கிறார்கள் என்றால், ஏற்ற இறக்கங்களுடன் கூடிய அவர்களது பேச்சு வேறு வேறு நேரங்களில் அவர்களை சென்றடையும். இதனால், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் பேச்சு அவர்களுக்கு குழப்பம் தரும் வகையில் சென்று சேரும் என தெரிய வருகிறது.

செவ்வாயில் வெப்பநிலைக்கு ஏற்ப விரைவான மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு முறையும் ரோவரில் இருந்து ஒலி அலைகளை வெளியேற செய்து அதன் வேகம் அளவிடப்பட்டு உள்ளது. செவ்வாயில் வேறு என்ன மறைவான விசயங்கள் உள்ளன என ஆய்வு செய்யும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US