ஈரானில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
ஈரானில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரசுக்கு சொந்தமான பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அபாடன் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுதுபார்க்கும் பணியில் இருந்த ஒரு அலகில் நேற்று (19) கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், தொழிலாளி ஒருவர் பலியானதாகவும் அப்பத்திரிகையில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரத்தில் தீயை அணைத்தபோதிலும் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சுமார் 670 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அபாடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1912 இல் தனது செயற்பாட்டைத் தொடங்கியது.
இது நாட்டின் எரிபொருளில் சுமார் 25 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இங்கு தினமும் 5,200,000 பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.