நாய் கடித்துக் குதறியதில் பரிதாபமாக பறிபோன உயிர்: இளைஞர் கைது
பிரிட்டனில் நாய் ஒன்று கொடூரமாக தாக்கியதில் நபர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். ஹாம்ப்ஷயரின் ஃபரேஹாமில் உள்ள பூங்கா பகுதியில் பட்டப்பகலில் 34 வயதுடைய நபர் நாயால் தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரை, ஆபத்தான முறையில் கட்டுப்பாடில்லாமல் நாயை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட நாய் எந்த இனம் என பொலிஸ் தரப்பு வெளியிடவில்லை. புதன்கிழமை பகல் சுமார் 10.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நேர்ந்துள்ளது.
தகவல் அறிந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவப் பகுதிக்கு விரிந்து சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, கைதான 20 வயது இளைஞர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் கண்காணிப்பில் வைக்கப்படுவார் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.