கனடாவில் தட்டம்மை நோய் அதிகரிப்பு
கனடாவின் நியூ பிரவுன்ஸ்வீக் பிராந்தியத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று தினங்களில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்ரிக்ஷன், அப்பர் செயின் ஜோன் ரிவர் வெலி ஆகிய பகுதிகளில் இவ்வாறு தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நியூ பிரவுன்ஸ்விக் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை உறுதி செய்துள்ளது.
நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் நோயாளர் எண்ணிக்கை வரையறுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
தட்டம்மை நோய் மிக வேகமாக ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு மற்றொருவருக்கு பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகளை உரிய முறையில் ஏற்றிக் கொள்வதன் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதற்கு முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசிகளை முடிந்த அளவு ஏற்றுக் கொள்ளுமாறு பொதுச் சுகாதார அலுவலகம் பிரதேச வாழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட சில நோய் அறிகுறிகள் இருந்தால் அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.