பங்களாதேசை அச்சுறுத்தும் தட்டம்மை நோய் ; பலி எண்ணிக்கை உயர்வு
பங்களாதேசில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 15 முதல் நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதே காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான புதிய சந்தேகிக்கப்படும் நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், பலருக்கு ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பங்களாதேசத்தில் 74,000க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் தேவை என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி முயற்சிகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை மட்டும் போதாது என்றும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்குதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.