ஐரோப்பிய நாடொன்றில் தாவரத்தில் தயாரிக்கப்படும் மாமிசம்!
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய மாமிச உணவு வகை உற்பத்தி செய்யப்படுகிறது. கோழி, இறைச்சி வகைகளின் சுவையையும் வடிவத்தையும் தொழில்நுட்பம் அப்படியே வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பார்சலோனாவைச் (Barcelona) சேர்ந்த Novameat நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் பார்ப்பதற்கு உண்மையான இறைச்சியைப்போல் இருந்தாலும் இது முழுக்கமுழுக்க தாவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவாகும்.
Novameat நிறுவனம் ‘Micro filaments எனும் முறையைக்கொண்டு இதை உருவாக்குகிறது மாற்று வகை மாமிசம் முதலில் முப்பரிமாண முறையில்தான் அச்சிடப்பட்டது.
ஆனால் உற்பத்தி அளவு கூடிவிட்டதால் வேறொரு தொழில்நுட்பத்தை நிறுவனம் இப்போது பயன்படுத்துகிறது.