மேகனை அழைத்து வரக்கூடாது; ஹாரிக்கு உத்தரவிட்ட மன்னர்!
பிரித்தானிய மகாராணியார் (Queen Elizabeth II ) உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த நிலையில், அவரைக் காண மேகனை (Meghan ) அழைத்துவரக்கூடாது என இளவரசர் ஹரிக்கு((Harry) மன்னர் சார்லஸ்(King Charles III) உத்தரவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மேகன் தன் வாழ்க்கையில் காலடி எடுத்துவைத்த பிறகு, ஹரி தானும் தன் மனைவியும் (Harry and Meghan ) செய்யப்போகும் எந்த விடயத்தையும் தன் குடும்பத்தார் யாரிடமும் நேரடியாக சொல்வதில்லை.
அதுபோலவே தாங்கள் அமெரிக்க தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கப்போவதை ஹரி (Harry), மகாராணியாரிடம் (Queen Elizabeth II ) கூட முன்கூட்டியே முறைப்படி தெரிவிக்கவில்லை.
மன்னர் உத்தரவு
அதேபோல, குடும்பத்தினரைக் கலந்தாலோசிக்காமலே, தாங்கள் மகாராணியாரைக் (Queen Elizabeth II ) காண்பதற்காக ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் மாளிகைக்கு செல்வதாக தனது செய்தித்தொடர்பாளர் மூலம் ஹரியும் மேகனும் (Harry and Meghan )அறிவித்தனர்.
இதனையடுத்து , ஹரியை (Harry) தொலைபேசியில் அழைத்த மன்னர் சார்லஸ் (King Charles III) , மகாராணியாரைக் (Queen Elizabeth II ) காண மேகனை அழைத்துவரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இப்படி ஒரு துக்கமான நேரத்தில் பால்மோரலுக்கு மேகனை அழைத்து வருவது சரியோ முறையோ அல்ல என்றும் ஹரியிடம் மன்னர் (King Charles III) கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராணியாரைக் (Queen Elizabeth II ) காண நெருக்கமான குடும்பத்தினர் மட்டுமே வரவேண்டும், இளவரசர் வில்லியமுடைய மனைவியான கேட் கூட வரவில்லை, ஆகவே, மேகன் வரக்கூடாது என உறுதியாகக் கூறிவிட்டாராம் மன்னர்.
விமானத்தில் இடமில்லை
இதற்கிடையில், இளவரசர் வில்லியம், இளவரசர்கள் எட்வர்ட் மற்றும் ஆண்ட்ரூ ஆகியோர் பயணித்த விமானப்படை விமானத்தில் இளவரசர் ஹரிக்கும் (Harry) இடமளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், தனியார் விமானம் ஒன்றில் ஹரி புறப்பட்டிருக்கிறார் .
அதேவேளை மகாராணியாருக்கு மிகவும் பிடித்த செல்லப்பேரனாக இருந்தவர் ஹரி. எனினும் , மகாராணியார் இயற்கை எய்தியதாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னரே பால்மோரலை ஹரி (Harry) சென்றடைந்ததாகவும் கூறப்படுகின்றது.