மெலனியா டிரம்பின் $MELANIA கிரிப்டோ அறிமுகம்!
அமெரிக்க புதிய முதல் பெண்மணியாகும் மெலனியா டிரம்ப், $MELANIA என்ற கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதற்குப் பின்னர், ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் $Trump கிரிப்டோகரன்சியை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியிருந்தார்.
CoinMarketCap தரவுகளின்படி, $Trump இன் சந்தை மதிப்பு $12 பில்லியனை எட்டியுள்ள நிலையில், $MELANIA $1.7 பில்லியனாக உயர்ந்துள்ளது.
சோலானா பிளாக்செயினில் உருவாக்கப்பட்ட $MELANIA ஒரு முதலீட்டு வாய்ப்பாகக் கருதப்படவில்லை, ஆனால் அதன் வர்த்தகம் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
டிரம்ப் ஒருகாலத்தில் கிரிப்டோவை “மோசடி” என்று விமர்சித்தாலும், 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது டிஜிட்டல் சொத்துக்களைப் பயன்படுத்திய முதல் ஜனாதிபதி வேட்பாளராகவும், கிரிப்டோ விதிகளை தளர்த்தும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
இதேவேளை, பிட்காயின் புதிய சாதனையை எட்டியுள்ள நிலையில், கிரிப்டோ துறை மீதான அடுத்தகட்ட அரசியல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.